போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 283
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 26 சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட குழந்தை நல குழு உறுப்பினர் முனைவர் பிரபு போதைப் பொருட்களை மாணவர்கள் உட்கொள்ளும் பொழுது உடல் அளவில் மன அளவில் ஏற்படும் பிரச்சனைகள் போதை பொருளினால் பாதிக்கப்பட்டவரின் மறுவாழ்வு பணிகள் போதை பொருளினால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குற்றங்ககளை தடுப்பதில் மாணவர்களின் பங்கு குறித்தும் இளஞ்சிறார் நீதி சட்டம் பிரிவுகள் 77,78 போதைப்பொருள்களை வழங்குவது, விற்பது, போதைப்பொருளை கடத்துவதற்கு, விற்பதற்கு குழந்தைகளை பயன்படுத்தும் சமூக விரோதிகளுக்கு தண்டனைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் முத்துமாணிக்கம் போதைப்பொருள்களை பெற்றோர்கள் பயன்படுத்தி வருவதினால் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனை பாதிப்புகள் குறித்தும் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவராசு ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு நலன் சார்ந்து பேசினார்கள். சில்ரன் சாரிடபில் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ராபின் லயன்ஸ் கிளப் நிர்வாகி மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி மாணவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு குழந்தைகள் மீதான வன்முறை குறித்த போஸ்டர்கள் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்கள் பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.