சோழமங்கலத்தில் பெண்கள், குழந்தைகள்பாதுகாப்பு குற்றத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள மும்முடி சோழமங்கலத்தில் பெண்கள்,குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் குழந்தைகள்,பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், குற்றசம்பவங்கள் தடுக்கும் வழிமுறைகளையும்,குற்றசம்பவங்கள் நடந்தால் காவல் துறைக்கு உடனடி தகவல் தெரிவிக்க வேண்டும், முதியோர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.மேலும் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் குந்தவை நாச்சியார் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு குறித்து அறிவுரைகளையும்,ஆலோசனைகளயும் வழங்கினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மும்முடி சோழமங்கலம் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.