உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

0 312
Stalin trichy visit

திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை சார்பில் இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.

இந்த பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் பங்கேற்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் டீன் நேரு உறுதிமொழி பிரகடனத்தை வாசித்து இந்த பேரணியை துவக்கி வைத்தார்.

மேலும் மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது புதிய நுழைவாயில் வழியாக வெளியேறி அரசு மருத்துவமனையின் பழைய நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

மேலும் புற்றுநோய் விழிப்புணர்வுதொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த பேரணியில் திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையின் டீன் நேரு மருத்துவ கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளிடம் பேசிய டீன் நேரு  க்ளோஸ் த கேப் என்ற தலைப்பின் கீழ் இந்த விழிப்புணர்வு நடைபெறுகிறது.

புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு தடையாக உள்ள இடைவெளிகளை கலைந்து முழுமை அடைய செய்வதற்காக இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 லட்சம் பேர் இந்த புற்றுநோயால் இறந்துள்ளனர். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் 100% புற்றுநோயிலிருந்து விடுபடலாம். புற்றுநோய் குறித்த அறிகுறிகளை பொதுவாக யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாததால் புற்றுநோய் முக்கிய நிலையிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய சிறிய அளவிலான மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த புற்றுநோய் குறித்த அறிகுறிகளுக்கான அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்திருந்தால் புற்றுநோயை தடுக்க ஒரு சிறந்த வழியாக அமையும்.

Leave A Reply

Your email address will not be published.