நடந்து சென்ற பெண் மீது பைக் மோதி விபத்து : 2 பேர் படுகாயம்

0 287
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அகிலாண்டேஸ்வரி நகர் லால்குடி கூகூர் சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

லால்குடி வடம்போக்கி லேன் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி 45 வயதான ராசாத்தி.இவர் அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியில் உள்ள லால்குடி கூகூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது லால்குடி கோதை தெருவை சேர்ந்த 50 வயதான முதன்செல்வன் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.இந்நிலையில் நடந்து சென்ற ராசாத்தி மீது மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். ராசாத்தியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்தமிழ்செல்வனை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லால்குடி போலீசார் வளர்ப்பது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.