சோமரசம்பேட்டை அருகே உள்ள என்.சாத்தனூரை சேர்ந்தவர் சக்திவேல்(41). இவரின் வீட்டின் முன்பு தனது வாகனத்தை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்கர் (24) மற்றும் பிரதாப் (22) ஆகியோர் குடிபோதையில் சக்திவேலின் மொபட்டை தள்ளி விட்டுள்ளனர். இதைக்கண்ட சக்திவேல் அவர்களிடம் தட்டி கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதை கண்ட சக்திவேலின் தம்பி சசிகுமார் மற்றும் அவரது சகோதரி ஜெயக்கொடி (35) ஆகியோர் வந்து தடுத்துள்ளனர். அப்போது சங்கருக்கு ஆதரவாக ஆனந்த் (45), ஞானசேகர் (50) ஆகிய 4 பேரும் சேர்ந்து சக்திவேல், அவரது தம்பி சசிகுமார், அவரது சகோதரி ஜெயக்கொடியையும் தாக்கி உள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.