கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்; ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்

0 384
Stalin trichy visit

ஆத்தூரில் இருந்து பச்சைமலை செல்லும் அரசு பேருந்து பெரிய மங்கலம் அருகே நேற்று மாலை வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரிக்கு டிரைவர் வழி விட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இடது பக்கம் திரும்பியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதிகபடியான ஈரம் காரணமாக பேருந்து மளமளவென பள்ளத்தில் இறங்கியது.

இருந்த போதும் டிரைவரின் சாமர்த்தியத்தால் பேருந்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன் பின்னர் ஜேசிபி எந்திரத்தின் மூலம் பேருந்து சாலைக்கு கொண்டு வரப்பட்டது. ஆத்தூரில் இருந்து பச்சை மலைக்கு செல்லும் சாலையை புனரமைப்பு செய்ய வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.