திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பாப்பாகாலனி பகுதியில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒருவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.