குழந்தை உரிமையும் மனித உரிமையே – விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 409
Stalin trichy visit

டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி, தொட்டியம் திருஈங்கோய்மலை ஸ்ரீ லலிதா மகிளா சமாஜம் குழந்தைகள் இல்லத்தில் *குழந்தை உரிமையும் “மனித உரிமையே என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 10.12.2022 நடைபெற்றது. இல்ல நிர்வாகி ஜெயம்பா தலைமை தாங்கினார்.இல்ல கண்காணிப்பாளர் சுமதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தை உரிமையும் மனித உரிமை என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான வாழ்வதற்கான உரிமை, வளர்வதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை இது மட்டுமின்றி மனித உரிமையும் குழந்தை உரிமையே என்பது குறித்தும் குழந்தைகள் மீதான வன்முறைகளான குழந்தை திருமணம், பாலியல் வன்முறை, குழந்தை கடத்தல், பெண் சிசுக்கொலை, குழந்தைகளை வைத்து யாசகம் எடுத்தல், குழந்தை நரபலி, குழந்தை தொழிலாளர், சட்டவிரோதமாக குழந்தை விற்றல், குழந்தை சிதரவதை,
வகுப்பறை தண்டனை,
மேலும் குழந்தை நலன் சார்ந்த சட்டங்களான
குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006, குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012,
குழந்தை மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986 மற்றும் திருத்தப்பட்ட சட்டம் 2016 குறித்தும்
இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக ஐ.நா அறிவித்துள்ள தனிநபர்
மாண்பு, சுதந்திரம், அனைவருக்கும் சமமான நீதி
Dignity Freedom Equal Justice to all கிடைத்திட பணியாற்றுவோம்,
மீறலைத் தடுப்போம் என்பது குறித்தும் தேசிய, மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் ,மனித உரிமை ஆணையம் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். ஸ்ரீ மகிளா சமாஜம் மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் திலகவதி, ரம்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இல்ல பணியாளர் அகிலா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் இல்ல குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.