மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்புகள் குறித்து கலெக்டர் ஆய்வு

0 304
Stalin trichy visit

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாநகராட்சித் தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட இதரப் பொருட்கள் வரப்பெற்று பாதுகாப்பு அறையில் வைக்கப்படும் நடவடிக்கைகளை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேற்று இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீலிடப்பட்டு, காவல் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். அருகில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் ஆகியோர் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.