திருச்சியில் அதிகமாக வாக்களித்தவர்கள் யார் தெரியுமா?
திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 432 பேர், நகராட்சிகளில் 50 ஆயிரத்து 622 பேர், பேரூராட்சிகளில் 56 ஆயிரத்து 912 பேர் என்று மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 966 பெண் வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.
அதன்படி மாவட்டம் முழுவதும் 11 ஆயிரத்து 928 பெண் வாக்காளர்கள் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் பெண்களின் ஓட்டு சதவீதம் 60.44 சதவீதமாகும். மேலும் மாவட்டத்தில் மொத்தமுள்ள 188 மூன்றாம் பாலின வாக்காளர்களில் (இதரர்) 40 பேர் மட்டுமே நேற்றைய தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். மாநகராட்சியில் ஓட்டு சதவீதம் குறைந்தது. திருச்சி மாநகராட்சியில் நேற்றைய தேர்தலில் 57.25 சதவீத வாக்காளர்களே ஓட்டளித்துள்ளனர். அதில் ஆண்கள் 58.84 சதவீதமும், பெண்கள் 55.76 சதவீதமும், இதரர் 19.38 சதவீதமும் ஓட்டளித்துள்ளனர்.