ஆயுதப்படை காவல் ஆளினர்களின் குறைதீர்க்கும் முகாம்; காவல் ஆணையர் G.கார்த்திகேயன் கலந்துகொண்டு குறைகளை கேட்டார்!
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் காவலர்களின் குறைதீர்க்கும் மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார். திருச்சி மாநகர ஆயுதப்படையில் உள்ள ஆயுத காப்பறை மற்றும் பண்டகம் ஆகியவற்றை ஆய்வு செய்து பொருட்களை மாநகர காவல் ஆளினர்களின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் வழங்கவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்கள். திருச்சி மாநகரத்தில் காவலர்களின் குறைகளை களைவது தொடர்பாக் இன்று காலை 11.00 மணியளவில் திருச்சி மாநகர ஆயுதப்படை அலுவலகத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவல் ஆளினர்களின் குறைதீர்க்கும் முகாமில் திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் கலந்துகொண்டு குறைகளை கேட்டார்கள். இந்த கூட்டத்தில்

திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் கலந்து கொண்டு பதவி உயர்வு, சம்பள குறைபாடு, வீடு மாற்றம் ஆகிய வற்றில் உள்ள குறைகளை தெரிவித்தார்கள். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்கள். இம்முகாமில் திருச்சி மாநகர துணை ஆணையர் (தெற்கு சரகம்) R.முத்தரசு கலந்து கொண்டார்கள். இதேபோன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பாக காவலர்களின் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் ஆளினர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்கள்.