கோவில் பிரச்சனையில் இரு தரப்பினரிடையே மோதல்

0 417
Stalin trichy visit

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரில் சக்தி மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது அந்தக் கோவிலானது அங்கு வசித்து வரும் இரண்டு தரப்பினரிடையே யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் அதில் ஒரு தரப்பினர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டுமென அறநிலையத் துறைக்கு புகார் அளித்து அந்தப் புகாரின் அடிப்படையில் அறநிலையத்துறை சார்பில் கடிதமானது கோவிலின் வளாகத்தில் நோட்டீஸ் வடிவில் ஒட்டப்பட்டது. அதில் இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற 7 நாட்களுக்குள் கோவிலை ஒப்படைக்க வேண்டுமென அதில் கூறப்பட்டு இருந்தது. அதில் ஒரு தரப்பினர் இந்த கோவிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்ளக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை செயல் அலுவலர் வெற்றிவேல் கோவிலுக்கு வந்து கோவில் சாவியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

 

எதிர்தரப்பினர் நாங்கள் இங்கு இல்லை வெளியில் வேலையாக சென்று விட்டதாக கூறியுள்ளனர். இதனால் பிரதோஷத்திற்கு வந்த பொதுமக்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் வெளியே நின்று விளக்குகளை ஏற்றி வழிபட்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி செயல் அலுவலர் வெற்றிவேல் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வந்த போலீசார் கோவிலில் விசாரணை செய்து கொண்டிருந்தனர்.

 

அப்போது வந்த எதிர் தரப்பினர் கோவிலை திறந்துள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு தரப்பினருக்கும் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைந்து செல்ல கூறினர். பின்னர் இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Leave A Reply

Your email address will not be published.