மின் கம்பி மீது உரசிய கண்டெய்னர் லாரியில் தீ!

0 692
Stalin trichy visit

திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா பகுதி அருகே சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது ராணுவ மைதானம் காம்பவுண்ட் அருகே சென்றபோது சாலை ஓரத்தில் மேலே சென்ற மின்கம்பி மீது கண்டெய்னர் லாரி உரசியது. இதில் கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்தது இதில் லாரியின் டயர் தீப்பிடித்து எரிந்தது. டிரைவர் சாலையின் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார்.

இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி கருணாகரன், நிலைய அலுவலர் மெல்கியூ ராஜா, நிலைய போக்குவரத்து அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.