வயிற்று வலி தாங்க முடியாமல் எலி பேஸ்டை சாப்பிட்ட வாலிபர் சாவு

0 299
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜுவின் மகன் கொளதம்(வயது 21). பட்டதாரி வாலிபரான இவர், கடந்த ஒரு வருடமாக குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வயிற்றி வலி தாங்காமல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு எலி பேஸ்ட் சாப்பிட்டதால், ஆபத்தான நிலையிலிருந்த கொளதமை பெற்றோர்கள் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கொளதம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கொளதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.