ஆட்டோ டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0 320
Stalin trichy visit

திருச்சி தில்லைநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வா. ஆட்டோ டிரைவர். ஆழ்வார்தோப்பு பகுதியில் சிலர், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை விஸ்வா கண்டித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து 10 பேர் கும்பல், ஆட்டோ டிரைவர் விஸ்வாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபு உள்ளிட்ட நபர்கள், ஆழ்வார்தோப்பு பஸ் நிறுத்தம் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ டிரைவர் மீதான தாக்குதல் தொடர்பாக தில்லை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.