வீட்டை விட்டு வெளியே சென்ற கல்லூரி மாணவி மாயம்

0 428
Stalin trichy visit

திருச்சி அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் ஆதி வெங்கட்ராமன். இவரது மகள் சுஸ்மிதா (வயது 18). இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் வீடு எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஸ்மிதாவை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.