திருச்சி வயலூர் ரோடு பகுதியில் வீடுகளில் சூழ்ந்த மழைநீர்; படகு மூலம் மீட்கும் தீயணைப்பு துறையினர்

0 604
Stalin trichy visit

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்தது.

இதில் குறிப்பாக திருச்சியின் உறையூர் கருமண்டபம் எடமலைப்பட்டி புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது இதனால் பொதுமக்கள் பலர் அன்றாட இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் தற்போது திருச்சி வயலூர் ரோடு பகுதியில் உள்ள எம்எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையினர் சார்பாக அப்பகுதியில் உள்ள மக்களை படகு மூலம் மீட்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.