பிரதமர் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் பொது தரிசனத்திற்கு தடை
திருச்சி,ஜன.19 திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு பாரத பிரதமர் அவர்கள் 20.01.2024 அன்று வருகை தருவதை முன்னிட்டு பாரத பிரதமர் பாதுகாப்பு நலன் கருதி 19.01.2024 மாலை 6 மணி முதல் 20.01.2024 பிற்பகல் 2.30 மணிவரை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.