சகதியான சாலை – ஒரு நாள் மழைக்கே தாங்காத திருச்சி மாநகராட்சி!
திருச்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஒரு புறம் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகள் பள்ளம், மேடுகளில் மழைநீர் புகுந்து வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் உறையூர் ராமலிங்கநர் 1வது தெரு
கோ.அபிசேகபுரம் கோட்டம் பாதளசாக்கடை போடபட்டு 6 மாதங்கள் கடந்தும் சாலை அமைக்கபட வில்லை என்றும், அப்பகுதி மக்கள் அவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அவல நிலையில் சாலை இருப்பதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

எல்லையில் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy