மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

0 323
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சியில் மழைக்காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாபெரும் மழைநீர் வடிகால் தூர்வாரி சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து அபிஷேகபுரம் கோட்டம் வார்டு எண் 60, குழுமணி சாலையிலுள்ள அரவனூர் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் 52வது வார்டு வயலூர் சாலையில் உள்ள கத்தரிக்காய் மழைநீர் வடிகால் ஆகியவற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், நகர பொருளாளர் அமுதவல்லி, மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம் ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.