தமிழகத்தின் முதன்மை காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருவெறும்பூர் காவல் நிலையம்!

0 716
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் சிறந்த காவல் நிலையமாக திருவெறும்பூர் காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முழுவதும் அனைத்து பணிகளையும், முதன்மையாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு , காவல் நிலைய கோப்புகளை முறையாக பராமரிப்பது, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்வது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ரவுடிகளை கைது செய்வது, நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாத வழக்குகள் குறித்த விசாரணை காவல் நிலைய பராமரிப்பு, பொது மக்களுடனான நல்லுறவு உள்ளிட்ட அனைத்திலும் சிறப்பாக விளங்கியதற்கான திருவெறும்பூர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப் பட்டதற்கான தமிழக அரசால் வழங்கப்பட்ட கேடயத்தை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தியிடமிருந்து திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் காவல் ஆய்வாளர் ஞானவேலன் உதவி ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்ட காவலர்கள் பெற்றுக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.