மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி; 4, 5ந் தேதி நடக்கிறது

0 296
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி வருகிற 4ந் தேதி, 5ந்தேதி ஆகிய 2 நாட்கள் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் அணியினர் 4ந் தேதி காலை 7 மணிக்கும், பெண்கள் அணியினர் 5ந் தேதி காலை 7 மணிக்கும் வரவேண்டும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இறுதிப்போட்டி 5ந்தேதி மாலை 6 மணிக்கு மின்னொளியில் நடைபெறும். வெற்றி பெறும் அணியினருக்கு பரிசு, சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களங வழங்கப்பட உள்ளன. இந்த தகவலை திருச்சி மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் எஸ்.கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.