திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையடுத்த துவாக்குடி அருகே உள்ள ராவுத்தர்மேடு பகுதியை சேர்ந்தவர் ஜாகிதா(வயது 52). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் முபாரக் அலி(33). இவர் துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முபாரக் அலி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனது. இதில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் முபாரக் அலி தனக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்குமாறு தனது தாயிடம் வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் முபாரக் அலிக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடி பழக்கத்தை கைவிட்டால் தான் உனக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என அவரது தாய் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனை அடுத்து அவரது தாயார் இதுகுறித்து துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலனிடம் புகார் அளித்தார். மேலும் இந்த புகார் மனுவை ஏற்ற துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகே உள்ள துவாக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.