திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை, துவாக்குடி நகரம் மற்றும் பொன்னம்பட்டி, கூத்தைப்பார் பேரூர் கழகங்களில் தேர்தல் ஆணையர் பி.டி.சி.ஜி.செல்வராஜ் (தொழிலாளர் அணி துணைச் செயலாளர்) நாளை (திங்கட்கிழமை) அன்று கழக விருப்ப மனுவை வழங்கியும், பெறவும் இசைந்துள்ளார்கள் எனவே கீழ்க்கண்ட விவரப்படி மனுக்கள் பெறப்படுகிறது. நகர, பேரூர் கழகங்களில் போட்டியிடுவோர், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வேட்புமனு விண்ணப்பத் தாள் ஒன்றுக்கு ரூ.25 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். நகரக் கழகத்திற்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள்,
மூவர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்) ஆகிய அலுவலர்களையும், மக்கள் தொகை 50 ஆயிரத்துக்குட்பட்ட நகரமாக இருந்தால் ஒரு பிரதிநிதியையும், 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்கள் இரண்டு பிரதிநிதியையும், ஒரு லட்சத்திலிருந்து, ஒன்றரை லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மூன்று பிரதிநிதிகளையும், ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்கள் நான்கு பிரதிநிதிகளையும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஐந்து பிரதிநிதிகளையும் மாவட்டக் கழகத்திற்கு தேர்ந்தெடுக்க வேண்டும். பேரூர் கழகத்திற்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணை செயலாளர்கள்
மூவர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினரகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்) ஆகிய அலுவலாலர்களையும், ஒன்றியப் பிரதிநிதிகளாக ஐவரையும், மாவட்டப் பிரதிநிதிகளாக இருவரையும் அவர்களைத் தவிர செயற்குழு உறுப்பினர்கள் ஆறு பேர்களையும், தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்புகளுக்கான வேட்புமனுக்களை, மாவட்ட கழக அலுவலத்தில் பெற்று, முறைப்படி வேட்புமனுவினை பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்துடன் நாளை (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள்ளாக, மாவட்ட தி.மு.க. அலுவலம், வி.என். நகர், 2வது குறுக்கு தெரு, (சத்திரம் பேருந்து நிலையம் அருகில்) தலைமை கழகத்தால் அனுப்பி வைக்கப்படும், பிரதியிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.