நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்து மானபங்கம் படுத்த முயன்றவர் கைது

0 323
Stalin trichy visit

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் 39 வயது பெண் அங்குள்ள அரசு பள்ளி அருகே சம்பவத்தன்று இரவு 8.45 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மேல அம்பிகாபுரம் முனீஸ்வரன்கோவில் வீதியை சேர்ந்த விக்னேஷ்(வயது 29) என்பவர் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து வாயை பொத்தி மானபங்க படுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவரை தகாதவார்த்தைகளால் திட்டியதுடன் அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.