புதிய கழிப்பிடம் கட்டித்தர DYFI அமைப்பினர் போராட்டம் – நடவடிக்கை எடுத்த மாநகராட்சி!

0 371
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 47, 48 வது வார்டுக்குட்பட்ட கூனிபஜார் பகுதியில் இடித்து கிடக்கும் பொது கழிப்பிடத்தை புதிதாக கட்டி தர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக இன்று கூனி பஜார் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகளும் வருகை தந்து கோரிக்கை சம்பந்தமாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திட அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் துணை ஆணையர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் அதே இடத்தில் இன்னும் 15 தினங்களில் புதிய கழிப்பறை கட்ட கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு மாத காலத்திற்குள் நிறைவடையும் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று எழுத்து பூர்வமாக ஒப்பந்தம் போடப்பட்டதையொட்டி போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் S.சுரேஷ், மாவட்ட து.தலைவர் கிச்சான், பகுதி செயலாளர் சேதுபதி, கிளை நிர்வாகிகள் தீபன், பிரபாகரன், வினோத் ஆகியோர் பங்கேற்றனர்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.