செல்போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

0 609
Stalin trichy visit

திருச்சி பெரிய மிளகுபாறை கள்ளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகன் தமிழ்செல்வன் (19). இவர் என்ஜினீயர் படித்து முடித்து வேலை தேடி வந்துள்ளார். தமிழ்செல்வன் இவரது தாயாரிடம் புதிதாக செல்போன் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவரது தாயார் மறுத்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த தமிழ்செல்வன் வீட்டில் தனது அறையை பூட்டி விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாக அறைக்கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தமிழ்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.