கலெக்டர் சிவராசு முன்னிலையில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை!
திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் எல்.பி.ஜி கேஸ் எடுத்துச் செல்லும் வாகனம் விபத்து ஏற்படும் போது எல்.பி.ஜி கேஸ்-ஐ மற்றொரு வாகனத்திற்கு பாதுகாப்புடன் மாற்றம் செய்வது தொடர்பாக அவசரகால பாதுகாப்பு

ஒத்திகைப் பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இனாம் குளத்தூர் பாட்டிலிங் பிளாண்ட் துணை பொது மேலாளர் டி.முரளி, முதுநிலை மேலாளர் ஆர்.ராஜேந்திரன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஸ்ரீதர் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.