திருச்சி புத்தூர் திரு.வி.க.நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராஜப்பன் (வயது 57). இவர் கட்டிடம் கட்டுமான என்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்சனையால் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய அவருடைய மனைவி ராஜப்பன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.