திடீரென தீப்பற்றிய காரால் பரபரப்பு!

0 396
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மருதுபட்டி என்ற இடத்தில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர் இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

காரை சாலையோரம் நிறுத்திவிட்டு சற்று தொலைவில் ஆனந்தன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த நிலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது. இச்சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.