பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.; அரசு தரும் சம்பளம் பத்தலயா? பொதுமக்கள் குமுறல்

0 1,566
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெங்கட்நாயக்கன்பட்டி கிராமம் கீழ்வால்பட்டியை சேர்ந்தவர் ஸ்டாலின்(வயது 34) டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு 1990ம் ஆண்டு வருவாய்த்துறை சார்பில் வீட்டு மனை உடமை உரிமை சான்று இவரது தந்தை ஆரோக்கியம் பெயரில்

வி.ஏ.ஓ. லஞ்சம் வாங்கும் வீடியோவை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்….

https://fb.watch/bs4h4rFaAX/

வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த இடத்திற்கு இந்த சான்று மூலம் புதிதாக பட்டா வழங்கக்கோரி வெங்கட்ட நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்வத்தை ஸ்டாலின் அணுகியுள்ளார். பட்டா வழங்க 30 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்ட கிராம நிர்வாக அலுவலர் செல்வம், ஸ்டாலினிடமிருந்து 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் என இரண்டு தவணைகளாக பணம் பெற்றுக் கொண்டு ஒரு ஆண்டாக பட்டா வழங்காமல் ஸ்டாலினை இழுத்தடித்துள்ளார்.

இதனால், கடந்த 9-ம் தேதி வெங்கட் நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் சென்ற ஸ்டாலின், அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம், பட்டா குறித்து கேட்டுள்ளார். அப்போது பேசிய செல்வம், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி மேலும், 10 ஆயிரம் ரூபாயை கொடுக்குமாறு ஸ்டாலினிடம் கூறியுள்ளார். ஏற்கனவே, 25 ஆயிரம் கொடுத்து விட்டேன். தன்னிடம் இருப்பது 3 ஆயிரம் ரூபாய் தான் என்று கூறி 3 ஆயிரம் ரூபாயை செல்வத்திடம்

கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் செல்வம், பட்டா வழங்காமல் மீண்டும் காலம் தாழ்த்தியுள்ளார். இது குறித்து ஸ்டாலின் மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகம் சென்று புகார் செய்திருக்கிறார். இதனையடுத்து, அவசரம் அவசரமாக வேறொருவரின் இடத்தை ஸ்டாலினின் தந்தை ஆரோக்கியம் பெயரில் பட்டா போட்டு செல்வம் வழங்கியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகம் சென்று புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே, வெங்கட்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்வம், பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைர லாகி வருவது பரபரப்பை

ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகையில், அரசு கை நிறைய சம்பளம் தருகிறது. ஆனால் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் பெரும்பாலும் லஞ்சம் வாங்குவதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா? ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இதுபோன்ற அரசு அலுவலர்களை பணி நீக்கம் செய்தால்தான் மற்றவர்கள் இதுபோன்ற செல்களில் ஈடுபட மாட்டார்கள். தற்போது லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள வி.ஏ.ஓ. செல்வத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.