விவசாயி விஷம் குடித்து தற்கொலை

0 282
Stalin trichy visit

திருச்சி, நவ.23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். லால்குடி அருகே சிறுமயங்குடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சப்பானி. இவரது நடராஜன்(48). விவசாயம் செய்து வரும் இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி இவருக்கு மேலும் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்து அன்றிரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடிகாவல்துறையினல் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில. அனுமதித்தனர். பின்னர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.