டாஸ்மார்க் விற்பனையாளரை மிரட்டி மதுபாட்டிலை எடுத்து சென்ற வாலிபர்கள்
திருச்சி, நவ. 23 திருச்சி மாவட்டம், முசிறி அருகே தண்டலைப்புத்தூரில் டாஸ்மார்க் மதுபான கடையில் பாட்டிலை உடைத்து விற்பனையாளரை மிரட்டி மது பாட்டிலை எடுத்துச் சென்ற மூன்று பேர் மீது வழக்குபதிந்த காவல்துறையர் அவர்களை தேடி வருகின்றனர்.
முசிறி உள்ள தண்டலைபுத்தூர் கிராமத்தில் டாஸ்மார்க் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருபவர் ஜெயக்குமார் (42). இவர் பணியில் இருந்த போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் கடனாக மதுபாட்டில் கேட்டுள்ளனர். கடன் தர மறுத்ததையடுத்து அந்த வாலிபர்கள் அங்கிருந்த மதுபான பாட்டிலை உடைத்து குத்தி விடுவதாக மிரட்டி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து ஜெயக்குமார் முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் பேரூர் கிராமத்தைச் சேர்ந்தகிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன்(33),அதே கிராமத்தை சேர்ந்த லிவிங்ஸ்டன் மகன் கோபி (25) மோகன் மகன் தமிழ்செல்வன் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வாலிபர்களை தேடி வருகின்றனர்.
