காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை

0 328
Stalin trichy visit

திருச்சி, நவ. 17 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவி மங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(23). இவர் காதலில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு சுமார் 10.45 மணி அளவில் தனது வீட்டின் அருகே உள்ள வயக்காட்டின் கரையில் உள்ள புங்க மரத்தில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதை கவனித்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார்.இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல்துறையினர்வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.