பாதியில் நிற்கும் சாலை பணிகள் – பொதுமக்கள் அவதி!

0 520
Stalin trichy visit

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே ஒரு மாத காலத்திற்கு மேலாக பாதியிலேயே சாலை பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் ஒலையூர் ஊராட்சியில் ராகவேந்திரா நகர் பகுதியில் சாலை போட கற்கள் நடு ரோட்டில் கொட்டபட்டும், சாலையில் பரப்பியும் விடபட்டு ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் சாலை பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு குழந்தைகளை கூட்டி செல்ல கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் கற்கள் பரவிக் கிடப்பதால் விபத்துக்கு உள்ளாகின்றனர்.

உடனடியாக சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.