டூவீலர்கள் மோதல் – திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ காயம்!

0 674
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் காவல் குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரகாஷ். திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை டூவீலரில் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் இருந்து திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த டூவீலர் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரகாஷ் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.