நிலத்தகராறில் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

0 567
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள எம்.களத்தூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 29) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது நிலத்தினை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதாகவும், அந்த விவசாய நிலத்தில் தற்போது விவசாயம் செய்துள்ள நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முத்துவீரன் மனைவி கவுசல்யா என்பவர் ஆடு, மாடுகளை விட்டு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்காக ஜெயக்குமார் ஆடு மாடுகள் வயலுக்குள் நுழையாமல் இருக்க முள்வேலி அமைத்ததாகவும், இதனை எதற்காக அமைத்த என கேட்டு முத்துவீரன், இவரது மனைவி கவுசல்யா மகன் முகிலன் ஆகியோர் தகராறு செய்து ஜெயக்குமார் மனைவி ஆர்த்தி என்பவரை தகாத வார்த்தையில் பேசி கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஆர்த்தி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு காட்டுப்புத்தூர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து முத்துவீரன்(52) என்பவரை கைது செய்து கௌசல்யா மற்றும் முகிலன் மீது வழக்கு பதிந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.