புதுமைப் பெண் திட்டத்தில் 2ம் கட்டமாக 1730 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சரின் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக
திருவள்ளூரில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சியின் வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
அதன் ஒருபகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதாந்திர உதவித் தொகை
ரூ.1000/- பெறுவதற்கு பற்று அட்டைகள் (வங்கி Debit card)1730 மாணவிகளுக்கு
வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினார். இதில் திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் நித்தியா உள்ளிட்ட அதிகாரிகள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்…
1730 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கபட்டுள்ளது. மராமத்து பணிகள் நடைபெற்று வரும் காவிரி பாலம் இன்னும் 15 நாட்களுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். பருவம் தவறிய மழையால் திருச்சி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் 81ஏக்கர் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்..