தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் கடந்த 5 ம் தேதி பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடுநடைபெற்றது.
இதில் காவல்துறையினர் விதித்த சட்ட திட்டங்களை பின்பற்றாத தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் 12 பேர் மீது சிறுகனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சிறுகனூரில் கடந்த 5 ம் தேதி பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடுநடைபெற்றது.
இதில் காவல்துறையினர் விதித்த சட்ட திட்டங்களை பின்பற்றாமல்
பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 12 பேர் மீது சிறுகனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செயதனர்.
இதேபோல் சிறுகனூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அரசுக்கு எதிராக பேசியதாகவும்,சமயபுரம் சுங்கச்சாவடி மேலாளர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் இஸ்லாம் மதத்தை பற்றி தவறாக பேசியதாக நாகூர் தர்கா நிர்வாகி கொடுத்த புகாரின் பேரிலும் சிறுகனூர் காவல்துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.