அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு பெறப்படும் தொடக்க நிகழ்ச்சி; இன்று தொடக்கம்

0 517
Stalin trichy visit

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள், வருகின்ற இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29.11.2021 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் உரிய கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

மாநகராட்சி வார்டு மன்ற உறுப்பினர்-ரூ.5,000/-
நகர மன்ற வார்டு உறுப்பினர்-ரூ.2,500/- பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்-ரூ.1,500/-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்பமனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள், அதற்கான கட்டண அசல் ரசீதினை வைத்திருப்பவர்கள் மட்டுமே, மாவட்ட கழக அலுவலகத்தில் சமர்ப்பித்து, கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

விருப்பமனு பெறப்படும் தொடக்க நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறும். அது சமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.