“அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா பல துறைகளில் முதலிடம் வகிக்கும்” பிஎஸ்இ நிர்வாக இயக்குனர் தகவல்!

0 318
Stalin trichy visit

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) 10வது பட்டமளிப்பு விழா ஐஐஎம் இயக்குனர் பவன்குமார்சிங் தலைமையில் ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. தேர்வில் வெற்றி பெற்ற மற்றும் சிறந்த மதிப்பெண் பெற்ற 300 மேலாண்மை துறை மற்றும் 3 ஆராய்ச்சி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் விருதுகளை பிஎஸ்இ நிர்வாக இயக்குனர் ஆஷிஸ்குமார் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார். மேலும் சிறந்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பிஎஸ்இ நிர்வாக இயக்குனர் ஆஷிஸ்குமார் சவுகான் பேசுகையில், பண்டைய காலத்தில் நாளந்தா பல்கலைகழகம் இந்தியவின் கல்வி சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் உலகில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு கடுமையான பிரச்சனைகள்

ஏற்பட்டது. சிறந்த முறையில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக திட்டமிட்டு தடுப்பூசி செலுத்தியதன் மூலம் இந்திய மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படவில்லை. வளர்ந்த நாடுகள் தயாரித்த தடுப்பூசியுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் சிறந்த முறையில் செயலாற்றியது. கொரோனா காலங்களில் மத்திய அரசு வழங்கிய இலவச ரேஷன் பொருட்கள் மக்களை வறுமையில் இருந்து காப்பாற்றியது. தற்போது தடுமாறிய இந்திய பொருளாதாரம் தற்போது சிறப்பா வளர்ச்சி அடைந்து வருகிறது. நன்றி, பொறுப்பு, ஆர்வம், புதிய கண்டுபிடிப்பு, அர்பணிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள். பட்டம் முடித்த பிறகு பணிக்கு செல்வதா இல்லை தொழில் முனைவோர் ஆவதா என்கிற குழப்ப நிலை ஏற்படும். நீங்கள் எடுக்கும் முடிவு நாட்டிற்கும், உங்கள் குடும்பத்திற்கும்

 

பயன் தருவதாக அமைய வேண்டும். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் கல்லூரியில் தங்க பதக்கம் வென்றவர்கள் தோல்வி அடையும் நிலைமை ஏற்படும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, புதிய வாய்ப்புகளை தேடி செல்லுங்கள். கல்வி வளர்ச்சி, வறுமை நீங்க, சுகாதாரம், ஊட்டசத்து வளர்ச்சி காணும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தொழில்சாலை புரட்சி காரணமாக மனித உழைப்பிற்கு பதிலாக தானியங்கி இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரம், ராணுவம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முதலிடம் வகிக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் ஐஐஎம் திருச்சி நிர்வாக குழு சேர்மன் ஜலாஜ் தானி, டீன்கள் காட்வின் டென்னிசன், தீபக்குமார் ஸ்ரீவத்சவ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.