கூலித்தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை

0 441
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் வாலிபரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான வாலிபர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்..அதே பகுதி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் 46 வயதான சிவகுமார்.இவர் கம்பரசர் வண்டி வைத்து தொழில் செய்து வருகிறார் வாலிபரின் மனைவிக்கும் சிவகுமாருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சிவகுமார் வீட்டில் இருவரும் மது அருந்திவிட்டு ஏற்பட்ட வாக்குவாதத்தில் கயிரை எடுத்து வாலிபரின் கழுத்தை நெருக்கி உள்ளார். இதில் வாலிபர் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து இரவு நண்பர்கள் உதவியுடன் வாலிபர் போதையில் இருந்ததாக சொல்லி வாலிபரை வீட்டில் விட்டுள்ளனர். வாலிபரின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதத்தை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் வழக்கு பதிவு சிறுகனூர் போலீசார் சிவகுமாரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.