சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு 

0 324
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கீழ பஞ்சப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அருண்பாண்டி(வயது 22). கூலி தொழிலாளி. இவரது உறவுக்கார 14 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் பெற்றோர் சென்னையில் கூலி தொழில் செய்து வருகின்றனர். இந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். அருண்பாண்டிக்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த சிறுமி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அப்போது பரிசோதித்த போது அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பம் என்று தெரியவந்தது. உடனே அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் சமூக ஊர் நல அலுவலர் கவுரிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இது தொடர்பாக கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி அருண்பாண்டியை கைது செய்து திருச்சி மகிளா கோட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தா

Leave A Reply

Your email address will not be published.