பூமிநாதன் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீரமரணமடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினரை திருவெறும்பூர் நவல்பட்டு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தனது இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம். மாரியப்பன்,கே.எஸ்.எம். கருணாநிதி, சண்முகம், கங்காதரன், ஜெகதீசன் உள்ளிட்டோர் உடன் அஞ்சலி செலுத்தினர்.