“நாடு நலமாக இருக்க வேண்டும்” – ஸ்ரீரங்கத்தில் ம.பி முதலமைச்சர் சிவராஜ்சிங் குடும்பத்துடன் சாமி தரிசனம்

0 509
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக மத்தியபிரதேச முதலமைச்சருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது – மேள தாளங்கள் முழங்க, கோவில் யானையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலில் இராமானுஜர் சன்னதிக்கு சென்ற சிவராஜ் சிங் சவுஹான் உடையவர் இராமனுஜரை தரிசனம் செய்தார் – பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் தரிசனம் மேற்கொண்ட பின்

ஆரியபடாள் வாசல் வழியாக சென்று மூலவர் பெரிய பெருமாள் ரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு பின்னர் தாயார் சன்னதியில் தரிசனம் மேற்கொண்டார்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் :

நாடு நலமாக இருக்க வேண்டும்,மங்களகரமாக சுபிக்ட்சமாக இருக்க வேண்டும்.

உலக நன்மைக்காக நம் நாட்டு நன்மைக்காக பல்வேறு ஆலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறேன், சீரகத்தில் தரிசனத்தை முடித்த பின்னர் மதுரைக்கு செல்ல உள்ளேன்.

Leave A Reply

Your email address will not be published.