மழையால் சேதமடைந்த வீட்டை அமைச்சர் பார்வையிட்டு நிதியுதவி வழங்கி ஆறுதல்!
திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் மழையால் சேதமடைந்த வீட்டினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

காட்டூர் பகுதி அரியமங்கலம் 28 வார்டில் மழையால் சேதமடைந்த வீட்டினை பார்வையிட்டு வீட்டில் வசிக்கும் மும்தாஜ் பேகம், அசுமதீன் ஆகியோருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.

இந்நிகழ்வில் பொன்மலை பகுதி கழக செயலாளர் தர்மராஜ் வட்டச்செயலாளர் மணி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்