ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம்; 3-ந் தேதி நடக்கிறது

0 332
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் வருகிற 3-ந் தேதி ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ.1,100 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் கருத்தடை சிகிச்சை செய்யப்படும் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை.

உடனே வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி, ரத்த சேதம் இன்றி, தையல் தழும்பு இன்றி மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சையால் பின்விளைவுகள் இருக்காது. தகுதி வாய்ந்த ஆண்கள் முகாமில் கலந்து கொண்டு கருத்தடை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று மாவட்ட துணை இயக்குனர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம்) டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.