ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

0 356
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : வைகுந்த ஏகாதேசிபெருவிழாவிற்கான முகூர்த்தகால் நடும் வைபவம் ஐப்பசி மாதம் 28-ம் தேதி (14.11.2022) திங்கட்கிழமை நண்பகல் 12.00 – 12.30 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபம் அருகில் திருக்கோயில் இணை ஆணையர் திரு செ.மாரிமுத்து முன்னிலையில் நடைபெறும்.

வைகுந்த ஏகாதேசி பெருவிழா…
மார்கழி 07 -ம் தேதி (22.12 .2022) அன்று திருநெடுந்தாண்டகமும் ,
மார்கழி 08-ம் தேதி ( 23.12.2022) முதல் மார்கழி 17-ம் தேதி வரை ( 01.01.2023) பகல் பத்து திருவிழாக்களும் ,

மார்கழி 17-ம் தேதி (01.01.2023) அன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும்,

முக்கியத் திருநாளான ஸ்ரீ நம் பெருமாள் இரத்தினங்கியுடன் பரமபத வாசல் திறப்பு மார்கழி 18-ம் தேதி (02.01 .2023) திங்கட்கிழமை காலை 04.45 மணிக்கும் நடைபெரும் மேலும் மார்கழி 24-ம் தேதி (08.01.2023) ஸ்ரீநம்பெருமாள் கைத்தல சேவையும் , மார்கழி-25 -ம் தேதி (09.01.2023) அன்று திருமங்கை மன்னன் வேடுபறி திருவிழாவும், மார்கழி 26-ம் தேதி (10.01.2023) அன்று தீர்த்தவாரியும், மார்கழி-26ம் தேதி (11.01.2023) அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்ச்சமும் நடைபெறும் .

Leave A Reply

Your email address will not be published.