பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.

0 305
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உணவகம் முன்பு நிறுத்தியிருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

நம்பர் 1 டோல்கேட் பழனியப்ப நகரை சேர்ந்தவர் 52 வயதான அரவிந்த் கேசவன். இவர் கடந்த 21ஆம் தேதி தனது பைக்கை நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள உணவகம் முன்பு நிறுத்திவிட்டு மதுரை சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நேற்று கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.