குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை திட்டம்…தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர்….
திருச்சிராப்பள்ளி பெரிய மிளகுபாறை குழந்தைகள் மையத்தில் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின் கீழ் , 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறிந்து, தேவைப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து பரிந்துரை செய்து வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு, இ.ஆ.ப., இன்று தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பி.ரேணுகா , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் எம்.காஞ்சனா மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் , குழந்தைகள் மையப் பணியாளர்கள் உள்ளனர்.
